கோலாலம்பூர்: தம்மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டு விசாரணை நடந்துவரும் நிலையில், தம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களில் சிலரது சேவையை வேண்டாம் என இடையிலேயே நிறுத்திக்கொண்டார் முன்னாள் மலேசியப் பிரதமரான நஜிப் ரசாக். அவர் இப்படிச் செய்தது இரண்டு மாதங்களில் இரண்டாவது முறை. அவரது இறுதி மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 26ஆம் தேதிவரை நடைபெறும். இதிலும் தோற்றால் அவர் 12 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படலாம்.
வழக்கறிஞர்களின் சேவையை நிறுத்திக்கொண்ட நஜிப் ரசாக்
1 mins read
-

