சோல்: அணுவாயுதத்தைக் கைவிட்டால் வடகொரியாவிற்கு பொருளியல் உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்திருந்த நிலையில், அவர் 'வாயை மூடிக்கொண்டு இருக்கும்படி' வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் காட்டமாகக் கூறியுள்ளார். இத்திட்டம் குறித்து கடந்த மே மாதம் முதன்முதலில் அறிவித்திருந்த அதிபர் யூன், கடந்த புதனன்று மீண்டும் அதுபற்றிப் பேசினார். இதனையடுத்து, தங்கள் நாட்டின் கௌரவத்தையும் அணுவாயுதங்களையும் பொருளியல் ஒத்துழைப்பு மூலம் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று திரு யூன் நினைப்பது மிகச் சாதாரணமாகவும் குழந்தைத் தனமாகவும் இருக்கிறது என்று திருவாட்டி ஜோங் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்துகள் மிகுந்த அவமரியாதை செய்வதாகவும் பண்பற்றதாகவும் உள்ளன என்று தென்கொரிய ஒருமைப் பாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
வாயை மூடுங்கள்: வடகொரியா சாடல்
1 mins read
-

