பானம் வாங்காவிடினும் கட்டணம்: மலேசிய உணவங்காடி நிலையங்கள் அதிரடி

ஜார்ஜ்­ட­வுன்: பானம் எதை­யும் வாங்கி அருந்­தா­மல் உணவு மேசையை ஆக்­கி­ர­மித்­துள்­ள­வர்­களி­டம் காசு வசூ­லிக்­கும் நடை­முறையை மலே­சி­யா­வில் பல உண­வங்­காடி நிலை­யங்­கள் தொடங்­கி­இருக்கின்றன.

அப்­படி பானம் எதை­யும் வாங்­கா­மல் அமர்ந்­தி­ருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள் 50 காசு­கள் (S$0.15) தர வேண்­டும் என்ற அறி­விப்­புப் பல­கையை (படம்) வைத்­துள்­ளார் காப்­பிக்­கடை உரி­மை­யா­ள­ரான மிக்கா ஊய், 37.

"சில நேரங்­களில் ஐந்து பேர்­வரை எதை­யும் வாங்­கா­மல் மேசை­யில் அமர்ந்­துள்­ள­னர்," என்­றார் திரு ஊய்.

பானம் வாங்­கும்­படி வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் தம்­மால் வற்­பு­றுத்த முடி­யாது என்ற திரு ஊய், அதே நேரம் தமது விருந்­தோம்­ப­லால் அவர்­கள் ஏமாந்து போகா­மல் இருப்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­து­வேன் என்­றார்.

"பானம் வாங்­காத ஒரு வாடிக்­கை­யா­ளர் 50 காசு கொடுத்­தால், பதி­லுக்கு அவ­ருக்­குத் தண்­ணீர் கொடுப்­பேன்," என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், தமது அறி­விப்­புப் பல­கை­யைக் கண்டு வாடிக்­கை­யாளர்­கள் பல­ரும் தமது சூழ­லைப் புரிந்­து­கொண்டு, ஆத­ர­வ­ளிப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

அவ­ரது கடைக்கு அரு­கி­லுள்ள உண­வங்­காடி நிலை­யத்­தில் பானம் வாங்­கா­மல் அமர்ந்­தி­ருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் ஒரு ரிங்­கிட் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. இது­கு­றித்த ஒட்­டு­வில்லை எல்லா மேசை­க­ளி­லும் ஒட்­டப்­பட்டு உள்­ளது. மேலும், அங்­கேயே அருந்­தா­மல் பானத்தை வாங்­கிச் செல்­வோ­ரி­ட­மி­ருந்து 30 காசு வசூ­லிக்­கப்­படு­கிறது. படம்: தி ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!