பார்சிலோனா: போலந்து காற்பந்து வீரர் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கியின் (படம்) 70,000 யூரோ (S$100,000) மதிப்புடைய கைக்கடிகாரம் திருட்டுப்போனது. ஸ்பெயினின் பார்சிலோனா குழுவிற்காக விளையாடிவரும் இவர், நேற்று முன்தினம் பயிற்சித்திடலுக்குச் சென்றார். அப்போது திடலுக்கு வெளியே இவர் ரசிகர்களைச் சந்தித்துக்கொண்டு இருந்தபோது, யாரோ ஒருவர் காரின் கதவைத் திறந்து கைக்கடிகாரத்தைத் திருடினார். ஆயினும், விரைந்து செயல்பட்ட காவல்துறை, சந்தேகப் பேர்வழியைக் கைதுசெய்ய, லெவண்டோவ்ஸ்கியின் கைக்கடிகாரம் திரும்பக் கிடைத்தது.
காற்பந்து வீரரின் கடிகாரம் திருட்டு
1 mins read
-

