கம்போடியாவில் வேலை செய்யும் வியட்நாமிய சூதாட்டக் கூட ஊழியர்கள் ஆற்றில் நீந்தி நாடு திரும்பியிருக்கின்றனர்.
சம்பளம் தராமல் வேலை செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இந்த ஊழியர்கள் ஆற்றின்வழி நாடு திரும்பியதாக புனொம் பென் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியட்நாமுக்குத் திரும்பிய இவர்கள் சட்டவிரோதமாக கம்போடியாவில் வேலை செய்துகொண்டு இருந்திருக்கலாம் என்று கம்போடிய உள்துறை அமைச்சர் சார் கெங் செய்தியாளர்களிடம் சொன்னார்.
சூதாட்டக் கூட நிர்வாகி ஒருவரை கம்போடிய காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளதாகவும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

