தென் பிலிப்பீன்சில் உதவித் தொகைக்காகக் காத்திருந்த சிறுவர்கள், பெற்றோர் ஆகியோரில் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியதால் காயமடைந்துள்ளனர்.
கல்விச் செலவைச் சமாளிக்க சிரமப்படுவோருக்கு 4,000 பெசோஸ் (99 வெள்ளி) வரை உதவித் தொகை வழங்கப்போவதாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு உதவித் தொகையைப் பெற நாடெங்கும் பல இடங்களில் மக்கள் திரண்டனர்.
ஸாம்போவாங்கா நகரில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே சுமார் 5,000 பேர் திரண்டனர்.
அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் காயமடைந்தனர்.
குறைந்தது 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பிலிப்பீன்சின் சமூக நலன் அமைச்சர் எர்வின் டுல்ஃபோ தெரிவித்தார்.

