மழை ஓய்ந்தாலும் பலர் வீட்டிலிருந்து வெளியேற்றம்

மழை ஓய்ந்தாலும் பலர் வீட்டிலிருந்து வெளியேற்றம்

1 mins read
1bbbeab8-5e41-4e70-aa8a-63d51aa1c3a9
-

வெல்­லிங்­டன்: நியூ­சி­லாந்­தின் வடக்கு மற்­றும் மத்­திய பகு­தி­களில் கடந்த நான்கு நாள்­க­ளா­கத் தொடர்ந்து பெய்­து­வந்த சாரல் மழை நேற்று சற்று ஓய்ந்­தா­லும் இன்­னும் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­கள் தங்­கள் வீடு­களை விட்டு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

ஆகக் கடை­சி­யாக 100 பேர் இர­வோடு இர­வாக பாது­காப்­பான இடங்­க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­னர்.

அந்­நாட்­டின் தென்­தீவு நக­ரான நெல்­சன்­தான் ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு மட்­டும் நூற்­றுக்­க­ணக்­கான குடும்­பங்­கள் கடந்த ஒரு வாரத்­தில் அப்­பு­றப்­படுத்தப்பட்டுள்ளன. அவற்­றில் சில வீடு­கள் மீண்­டும் வசிக்க தகு­தி­யில்­லாத அள­வுக்­குச் சேத­ம­டைந்­துள்­ளன. கடும் வெள்­ளம் கார­ண­மாக வடக்­குத் தீவின் நக­ரங்­க­ளின் சாலை­களும் வீடு­களும் நீரில் மூழ்­கிக் கிடக்­கின்­றன. "கடந்த வாரத்­தில் இருந்­த­து­போல இப்­போது இல்லை. பெரும்­பா­லான மழைப்­பொ­ழிவு நாட்­டின் மேற்­குப் பகு­தி­யில்­தான் நிகழ்ந்­துள்­ளது," என்று நியூ­சி­லாந்­தின் வானிலை ஆய்வு நிலை­யம் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது. இதற்கு முன்­ன­தாக, நாட்­டின் வடக்கு மற்­றும் மத்­திய பகு­தி­களில் மழைப் பொழிவு மெது­வ­டைந்த பிறகு அது தனது எச்­ச­ரிக்­கையை மீட்­டுக்­கொண்­டது. நேற்று நெல்­சன் நக­ரில் இன்­னும் அதி­க­மான மீட்பு நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன என்று தெரி­வித்த அவ­ச­ர­கால நிர்­வாக அமைச்­சர் கீரன் மெக்­அ­னுல்டி, மீட்பு நட­வ­டிக்­கை­களில் உத­விய அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்­தார். அவர்­க­ளின் உதவி இல்­லை­யேல் இந்­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொள்ள அதிக காலம் எடுத்­தி­ருக்­கும், சிர­ம­மா­க­வும் இருந்­தி­ருக்­கும் என்­றார்.