நோம் பென்: சம்பளம் இல்லாமல் கம்போடியாவில் உள்ள சூதாட்டக் கூடங்களில் வேலை செய்து வந்த வியட்னாமிய ஊழியர்கள் பலர் எல்லைப் பகுதியில் உள்ள ஆற்றில் நீந்தி வியட்னாமுக்குத் தப்பினர்.
வியட்னாம் எல்லையோரம் உள்ள கண்டால் மாநிலத்தில் இருக்கும் சூதாட்டக் கூடத்தில் பாதுகாவலர்களுடன் சண்டையிட்டு ஏறத்தாழ 40 வியட்னாமிய ஊழியர்கள் தப்பினர். இவர்கள் ஆள் கடத்தல்காரர்களால் கம்போடியாவுக்குள் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. இவர்களைப் போன்றோருக்கு உதவி செய்து வருவதாக கம்போடியா அரசாங்கம் கூறியது.

