'வழக்குகளின் தீர்ப்புகளுக்காக காத்திருக்கமாட்டேன்'

'வழக்குகளின் தீர்ப்புகளுக்காக காத்திருக்கமாட்டேன்'

2 mins read
0012f553-7b30-42ff-8afd-0283c73b9f40
-

புத்­ரா­ஜெயா: அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிடி உட்­பட அக்­கட்­சி­யைச் சேர்ந்த சில முக்­கிய தலை­வர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணை­கள் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

இந்த வழக்­கு­க­ளுக்­கான தீர்ப்பு­ கள் அளிக்­கப்­பட்ட பிறகே

மலே­சி­யா­வின் அடுத்த பொதுத் தேர்­த­லுக்­கான தேதியை அந்­நாட்­டுப் பிர­த­ம­ரும் அம்னோ கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரு­மான திரு இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் அறி­விப்­பார் என்று பர­வ­லா­கப் பேசப்­ப­டு­கிறது.

இதை திரு இஸ்­மா­யில் சப்ரி மறுத்­துள்­ளார்.

வழக்­கு­க­ளின் தீர்ப்­பு­க­ளுக்­

கா­கக் காத்­தி­ருக்­கப் போவ­தில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

"பொதுத் தேர்­த­லுக்­கான தேதியை அறி­விக்க வழக்­கு­க­ளின் தீர்ப்­பு­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்க முடி­யாது. தீர்ப்­பு­கள் நீதி­மன்­றம் சம்­பந்­தப்­பட்­டவை. எப்­போது தீர்ப்

­ப­ளிக்க வேண்­டும் என்று சொல்­வ­தற்கு எனக்கு அதி­கா­ரம் இல்லை," என்­றார் திரு இஸ்­மா­யில் சப்ரி.

அம்னோ தலை­வர் திரு அக­மது ஸாஹிட் மீது 47 குற்­றச்­சாட்டு ­கள் பதி­வா­கி­யுள்­ளன.

அவற்­றில் நம்­பிக்­கைத் துரோகக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக 12 குற்­றச்­சாட்­டு­களும் ஊழல் தொடர்­பாக எட்டு குற்­றச்­சாட்­டு­களும்

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கு­வது தொடர்­பாக 27 குற்­றச்­சாட்டு ­களும் அடங்­கும்.

மலே­சி­யா­வின் அடுத்த பொதுத் தேர்­தலை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்­துக்­குள் நடத்த வேண்­டும்.

ஆனால் தேர்­தலை அதற்கு முன்­ன­தாக, கூடிய விரை­வில் நடத்த வேண்­டும் என்று அம்னோ விருப்­பம் தெரி­வித்­துள்­ளது.

திரு இஸ்­மா­யில் சப்ரி, பிர­த­மர் பதவி வகித்து ஓராண்டு ஆகி­விட்­டது.

திரு அகமது ஸாஹிட்­டுக்­கும் தமக்­கும் இடை­யி­லான உறவு மிக­வும் நெருக்­க­மா­னது என்று அண்­மை­யில் நடத்­தப்­பட்ட பேட்­டி­யில் திரு இஸ்­மா­யில் சப்ரி தெரி­வித்­தார்.

பள்­ளிப் பரு­வத்­தி­லி­ருந்தே திரு அக­மது ஸாஹிட்­டைத் தமக்­குத் தெரி­யும் என்­றும் அவ­ரும் தமது அண்­ண­னும் உயிர் நண்­பர்­கள் என்­றும் அவர் கூறி­னார்.

"பள்­ளிக்­குச் செல்­லா­மல் அவ­ரது அறை­யில் நான் இருந்­த­துண்டு. அவ­ரது மனை­வி­யும் குடும்­பத்­தா­ரும் எனக்கு நன்கு அறி­மு­க­மா­ன­வர்­கள். இன்று வரை­யி­லும் எங்

­க­ளி­டையே நெருக்­க­மான உறவு உள்­ளது.

"நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் திரு அக­மது ஸாஹிட்டை அவ­ரது வீட்­டிற்­குச் சென்று சந்­திப்­பேன். ஆனால் இதை நான் வெளியே சொல்­லிக்­கொள்­வ­தில்லை.

"அவ­ரைச் சந்­திக்­கும் ஒவ்­வொரு முறை­யும் செய்­தி­யா­ளர் கூட்­டத்தை நடத்­திச் சொல்­வ­தற்கு எனக்கு நேர­மில்லை," என்றார் திரு இஸ்­மா­யில் சப்ரி.

அம்­னோ­வுக்­குள் உட்­கட்சி பூசல் ஏது­மில்லை என்று அவர்

வலி­யு­றுத்­தி­னார்.

மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­தல் இவ்­வாண்டு நடத்­தப்­பட்­டா­லும் அல்­லது அடுத்த ஆண்டு நடத்­தப்­பட்­டா­லும் கவ­ன­மா­கப் பரி­சீ­லனை செய்த பிறகே தேர்­த­லுக்­கான தேதி நிர்­ண­யிக்­கப்­படும் என்­றார் அவர்.

அதற்கு முன்பு தற்­போது நிலு­வை­யில் உள்ள விவ­கா­ரங்­க­ளுக்­கும் பொரு­ளி­யல் நிலை­யற்­ற­

தன்­மைக்­கும் தீர்வு கண்ட பிறகு பொதுத் தேர்­த­லின் தேதி குறித்து முடி­வெ­டுக்­க­லாம் என்று திரு

இஸ்­மா­யில் சப்ரி தெரி­வித்­தார்.