வேலைநிறுத்தத்தில் இறங்கிய 2,000 பிரிட்டிஷ் துறைமுக ஊழியர்கள்

லண்­டன்: பிரிட்­ட­னின் ஆகப் பெரிய கொள்­க­லன் துறை­மு­கத்­தில் பணி­பு­ரி­யும் கிட்­டத்­தட்ட 2,000 ஊழி­யர்­கள் எட்டு நாள் வேலை­

நி­றுத்­தப் போராட்­டத்­தில் இறங்­கி­உள்­ள­னர்.

பிரிட்­ட­னில் கடந்த 40 ஆண்­டு ­கள் இல்­லாத அள­வில் பண­வீக்­கம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் விலை­வாசி உயர்ந்­தி­ருப்­ப­தா­லும் வாங்­கும்

சம்­ப­ளம் போத­வில்லை என்று அந்த ஊழி­யர்­கள் போர்க்­கொடி உயர்த்­தி ­உள்­ள­னர்.

இத­னால் ஃபிலிக்ஸ்டோ துறை­மு­கத்­தில் உள்ள ஊழி­யர்கள் நேற்று வேலை­நி­றுத்­தத்­தைத் தொடங்­கி­னர். ஆகக் கடை­சி­யாக 1989ஆம் ஆண்­டில் அங்கு வேலை­நி­றுத்­தப் போராட்­டம் நடத்­தப்­பட்­டது.

சம்­ப­ளம் தொடர்­பான விவ­

கா­ரங்­கள், வேலைச் சூழல்­கள் ஆகி­ய­வற்­றைக் கண்­டித்து கடந்த வியா­ழக்­கி­ழமை, சனிக்­கி­ழமை ஆகிய நாள்­களில் பிரிட்­டிஷ் ரயில் சேவை ஊழி­யர்­கள் வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பிரிட்­டிஷ் அஞ்சல் துறை ஊழி­யர்­களும் இம்­மா­தம் நான்கு நாள் வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் பிரிட்­ட­னில் பண­வீக்­கம் 10 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­கப் பதி­வா­னது.

இதன் விளை­வாக உணவு, எரி­சக்தி விலை அதி­க­ரித்து மில்­லி­யன்­க­ணக்­கான பிரிட்­டிஷ்

மக்­க­ள் பாதிக்கப்பட்டனர்.

இந்­நி­லை­யில், இவ்­வாண்டு பண­வீக்­கம் 13 விழுக்­காட்டை எட்­டும் என்று இங்­கி­லாந்து மத்­திய வங்கி முன்­னு­ரைத்­துள்­ளது.

இத­னால் ஆழ்ந்த, நீண்ட பொரு­ளி­யல் மந்­த­நி­லையை பிரிட்­டன் எதிர்­நோக்­கும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, துறை­முக ஊழி­யர்­க­ளின் வேலை­நி­றுத்­தம் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தத் துறை­மு­கம் ஆண்­டுக்கு 2,000 கப்­பல்­க­ளி­லி­ருந்து ஏறத்­தாழ நான்கு மில்­லி­யன் கொள்­க­லன்­

க­ளைக் கையாள்­கிறது.

பண­வீக்க விகி­தத்­துக்கு இணை­யான சம்­பள உயர்வை தமது உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்க வேண்­டும் என்­று வேலை­நி­றுத்­தத்­தில் ஈடு­பட்­டுள்ள துறை­முக ஊழி­யர்­க­ளைப் பிர­தி­நி­திக்­கும் யுனைட் தொழிற்­சங்­கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!