தைப்பே: சீனாவுக்குச் சொந்தமான ஐந்து போர் விமானங்கள் தைவான் நீரிணையில் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான எல்லையை நேற்று தாண்டியதாக தைவானிய தற்காப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
தைவானைச் சுற்றி 12 சீனப் போர் விமானங்களும் ஐந்து போர்க் கப்பல்களும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாக தைவானிய அதிகாரி கள் நேற்று தெரிவித்தன.
தைவானைத் தனது ஒரு
பகுதியாகச் சீனா கருதுகிறது. அண்மையில் அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசியும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தைவானுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டபோது சீனா
கடும் அதிருப்தி தெரிவித்தது.
அதை வெளிப்படுத்தும் வகையில் தைவானைச் சுற்றிப் போர்ப் பயிற்சிகளில் அது தீவிரமாக இறங்கியது. நேற்று முன்தினம் தைவானைச் சுற்றி 17 சீனப் போர்க்கப்பல்களும் ஐந்து சீனப் போர் விமானங்களும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாக தைவானிய தற்காப்பு அமைச்சு கூறியது. அப்போது அவற்றில் நான்கு போர் விமானங்கள் தைவானிய வான்வெளிக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

