உக்ரேனின் ஒடேசாவைப் பதம் பார்த்த ரஷ்ய ஏவுகணைகள்

உக்ரேனின் ஒடேசாவைப் பதம் பார்த்த ரஷ்ய ஏவுகணைகள்

1 mins read
fee3b732-3c46-4ec8-ac11-163fb095e32d
-

கியீவ்: உக்­ரே­னின் தென்­கி­ழக்­குப் பகுதி­யில் உள்ள ஒடே­சா­வில் இருந்த ஆயு­தக் கிடங்­கைத் தனது ஏவு­க­ணை­கள் தகர்த்­து­விட்­ட­தாக ரஷ்யா நேற்று தெரி­வித்­தது.

அந்த ஆயு­தக் கிடங்­கில்

அமெ­ரிக்­கா­வில் தயா­ரிக்­கப்­பட்ட ராக்­கெட்­டு­கள் இருந்­த­தாக அது கூறி­யது.

அது­மட்­டு­மல்­லாது, போர் விமா­னங்­களை எதிர்­கொண்டு அவற்­றைச் சுட்டு வீழ்த்­தும் கட்­ட­மைப்­பும் ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் அழிந்­த­தாக ரஷ்யா தெரி­வித்­தது.

அந்­தக் கட்­ட­மைப்பை மேற்­கத்­திய நாடு­கள் தயா­ரித்து

உக்­ரே­னுக்கு வழங்­கி­ய­தாக அது கூறி­யது.

இதற்­கி­டையே, ரஷ்யா பாய்ச்­சிய இரண்டு ஏவு­க­ணை­கள் கட­லுக்கு மேல் இருந்­த­போதே அவற்­றைச் சுட்டு வீழ்த்­தி­ய­தாக உக்­ரே­னின் ஒடேசா பிரிவு ராணு­வம் தெரி­வித்­தது.

ஆனால் விவ­சா­யம் தொடர்­பான இடங்­களை மூன்று ஏவு­க­ணை­கள் தகர்த்­தி­ய­தாக அது கூறி­யது.

ரஷ்­யா­வின் ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் யாரும் காய­ம­டை­ய­வில்லை என்று உக்­ரே­னிய ராணு­வம் தெரி­வித்­தது.

இந்­தத் தக­வல்­களை ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தால் உட­ன­டி­யாக உறுதி செய்ய முடி­ய­வில்லை.

உக்­ரே­னின் கெர்­சன் பகு­தி­யில் உக்­ரே­னிய ராணு­வம் நிறுத்தி வைத்­தி­ருந்த இரண்டு எம்777 ஹொவைட்­சர்­க­ளைத் தனது படை­கள் அழித்து­ விட்­ட­தாக ரஷ்­யா­வின் தற்­காப்பு அமைச்சு நேற்று கூறி­யது.

அத்­து­டன் உக்­ரே­னிய ராணு­வத்­துக்­குச் சொந்­த­மான எரி­

பொ­ருள் கிடங்­கும் அழிந்­த­தாக அது கூறி­யது. அதில் 100 டன்­னுக்­கும் அதி­க­மான டீசல் இருந்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், உக்­ரே­னின் சுதந்­திர தினம் நெருங்­கு­வ­தா­க­வும் அதனை முன்­னிட்டு ரஷ்யா தாக்­கு­தல்­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றும் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி எச்சரித்தார்.