தோக்கியோ: சீனாவுடனான ஏவுகணை வலிமை இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் 1,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இருப்பில் வைத்திருப்பது தொடர்பாக ஜப்பான் பரிசீலனை செய்து வருகிறது.
இத்திட்டம் பற்றி அறிந்த சிலர் இதுகுறித்து தகவல் அளித்ததாக ஜப்பானின் யோமியோரி நாளிதழ் நேற்று தெரிவித்தது.
500 கிலோமீட்டரிலிருந்து 5,500 கிலோமீட்டர் வரையிலான இலக்கு களைச் சென்றடையக்கூடிய இந்த ஏவுகணைகள் நன்செய் தீவு
களுக்கும் கியூஷுவுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் என அறியப்படுகிறது.
ஏறத்தாழ 300 கடல்வழி ஏவு
கணைகள், 1,900 நிலவழி ஏவு
கணைகள் ஆகியவற்றை சீனா வைத்திருப்பதாகவும் அதற்கு ஈடாக தமது தற்காப்பை வலுப்பத்திக்கொள்ள ஜப்பான் ஏவு
கணைகளைக் குவிக்க திட்ட
மிட்டுள்ளதாகவும் நாளிதழ் குறிப்பிட்டது.
சீனா, வடகொரியா ஆகிய நாடுகளிலிருந்து போர் அபாயம் ஏற்பட்டால் தன்னைத்
தற்காத்துக்கொள்ளும் வகையில் ஏவுகணை ஆற்றலை மேம்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் திட்டம் ஒன்றைத் தொடங்கியது.
உள்ளூரில் தயாரிக்கப்படும் ஏவுகணையின் ஆற்றலை மேம்
படுத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இவ்வகை ஏவுகணை 1,000க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தகர்க்கக்கூடியவை.
இந்த ஏவுகணைகளால் சீனாவின் கடலோரப் பகுதிகளையும் வடகொரியாவையும் சென்றடைய முடியும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத சிலர் தெரிவித்தாக நாளிதழ் கூறியது.
இதுகுறித்து ஜப்பானிய அதிகாரிகளிடமிருந்து தகவல் பெற முடியவில்லை என்று அந்த
நாளிதழ் கூறியது.
ஜப்பானின் தற்காப்பை வலுப்
படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

