உக்ரேன் மீது சரமாரியாக ஏவுகணைகளைத் தொடுக்கும் ரஷ்யா

உக்ரேன் மீது சரமாரியாக ஏவுகணைகளைத் தொடுக்கும் ரஷ்யா

1 mins read
96c2b15e-368e-4bc5-8625-f28c73ff944b
-
multi-img1 of 2

ரஷ்ய-உக்ரேன் போர் தொடங்கி அரை ஆண்டை நெருங்கிவிட்ட வேளையில் ர‌ஷ்ய துருப்புகள் ஏவுகணைத் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது என உக்ரேன் கூறுகிறது.

உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 175 நாட்களைக் கடந்து, தற்போது உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.

போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரேன் மீது நடத்தப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் ரஷ்யா மூன்று முறை தனது அதிவேக 'ஹைப்பர்சோனிக்' ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பதாக ர‌ஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.

ரஷ்யா மூன்று முறை 'ஹைப்பர்சோனிக்' கின்சல் ஏவுகணைகளை உக்ரேன் மீது பயன்படுத்தியதாக ஷோய்கு தெரிவித்துள்ளார்.

இந்த கின்சல் ஏவுகணைகள் உலகின் எந்த ஓர் இடத்தையும் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது என்றும் அவை வானில் பறக்கும்போது வீழ்த்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார்.