ஆறு மாதமாகியும் ஆறாத துயரம்

ஆறு மாதமாகியும் ஆறாத துயரம்

2 mins read
ffc09f6a-59b3-43b5-b21d-d661e94d4b1a
சுதந்திர தினத்தை முன்னிட்டு கியவ் நகரில், சேதமுற்ற ரஷ்ய பீரங்கி திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.ரஷ்யத் தாக்குதல் தொடரும் நிலையில் சிறு பீரங்கி மூலம் எதிர்த் தாக்குதல் நடத்தும் உக்ரேனியப் படையினர். இடது படம்: ஏஎஃப்பிமேல் படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

ரஷ்யா, உக்ரேனில் மூட்டிய போர்த் தீயின் உக்கிரம் இன்னும் தணியவில்லை

கியவ்: ரஷ்யா உக்­ரேன் மீதான தாக்­கு­தல்­க­ளைத் தொடங்கி ஆறு மாதங்­க­ளா­ன­போ­தும் போர் முடி­வுக்கு வந்­த­பா­டில்லை. இன்­னும் உக்­ரே­னில் பல இடங்­களை அது கடு­மை­யா­கத் தாக்­கி­ வ­ரு­கிறது.

சோவி­யத் யூனி­ய­னில் இருந்து பிரிந்து தனி நாடான 31வது ஆண்டு நிறைவை உக்­ரேன் நாளை அனு­ச­ரிக்க இருக்­கும் நிலை­யில் நேற்­று­கூட சில இடங்­களில் தாக்­கு­தல் தொடர்ந்­தது.

நிக்­கோ­போல் நக­ரில் நேற்று குண்டு மழை பொழிந்­தது. முன்­ன­தாக, சென்ற வார இறு­தி­யில் கருங்­க­டல் துறை­முக நக­ரான ஒடிசா ஏவு­க­ணைத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­னது.

இவ்­வே­ளை­யில், சுதந்­திர தினத்­துக்கு முன்­னர் மேலும் தீவி­ர­மான தாக்­கு­தல்­கள் நடத்­தப்­ப­டக்­கூ­டும் என்று உக்­ரே­னிய அதி­பர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி எச்­ச­ரித்­துள்­ளார்.

சென்ற பிப்­ர­வரி 24ஆம் தேதி போரைத் தொடங்­கிய ரஷ்யா, நாளை ஆகஸ்ட் 24ஆம் தேதி­யில் மோச­மான தாக்­கு­த­லுக்கு முயற்சி செய்­யக்­கூ­டும் என்­றும் சாத்­தி­ய­மான அனைத்து மிரட்­டல்­கள் குறித்­தும் தாம் பிரெஞ்சு அதி­பர் இமேனுவல் மெக்­ரோ­னி­டம் கலந்­தா­லோ­சித்­தி­ருப்­ப­தா­க­வும் திரு ஸெலன்ஸ்கி கூறி­னார். துருக்கி உள்­ளிட்ட நட்பு நாடு­க­ளுக்­கும் ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­திற்­கும் இது­கு­றித்­துத் தக­வல் அனுப்­பி­ இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்த ஆறு மாதங்­களில் இரு­தரப்­பி­லும் இழப்­பு­கள் அதி­கம் என்­பது கண்­கூடு. ஆனா­லும் சண்டை நிறுத்­தத்­திற்­கான அறி­குறி இன்­னும் புலப்­ப­ட­வில்லை.

குளிர் காலம் தொடங்­கி­விட்­டால் உக்­ரே­னி­யர்­கள் மேலும் சிர­மப்­பட நேரி­ட­லாம் என்­பதை ஆய்­வா­ளர்­கள் சுட்­டு­கின்­ற­னர்.

உக்­ரே­னின் தற்­காப்­புத் திறன் குறித்த மாஸ்­கோ­வின் மதிப்­பீடு பொய்­யா­கிப் போனா­லும் போர் நீடித்­தால் அதற்­கான செல­வு­க­ளைச் சமா­ளிக்க அது தயா­ராக இருப்­பது­போல் தோன்­று­கிறது.

கிரை­மி­யாவை எட்டு ஆண்­டு­களுக்கு முன்­னர் இணைத்­த­போதே ரஷ்­யா­மீது தடை­கள் விதிக்­கப்­பட்­டன. ஆனா­லும் அது மாற்று ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொண்­டது.

ரஷ்­யப் பொரு­ளி­யல், தொழில்­துறை, பொது­மக்­கள் எனப் பல தரப்­பு­களும் இதற்­குப் பழ­கிக்­கொண்­ட­னர் என்றே சொல்­ல­லாம்.

மேலை நாடு­கள் தொடர்ந்து நிதி­யோடு ஆயு­தங்­க­ளை­யும் தந்து உத­வி­னால் ரஷ்ய ராணுவ ஆதிக்­கத்­தைப் படிப்­ப­டி­யா­கத் துடைத்­தொ­ழிக்­க­லாம் என்கிறார் ஸெலன்ஸ்கி. போர் நெடு­நாள் நீடித்­தால் ரஷ்ய அதி­ப­ருக்கு உள்­நாட்­டில் பொது­மக்­கள் ஆத­ரவு முழு­மை­யா­கக் கிட்­டாது என்­பதையும் மறுப்­ப­தற்கு இல்லை என்­கின்­ற­னர் அரசியல் கவனிப்பாளர்கள்.