நியூகாசல் அணியைப் பாராட்டிய
மேன் சிட்டியின் பெப் கார்டியோலா
நியூகாஸல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தின் ஆகக் கடினமான போட்டிதரும் அணிகளில் ஒன்று நியூகாசல் யுனைடெட் அணி என்று மான்செஸ்டர் சிட்டி அணியின் நிர்வாகி பாராட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் இரு அணிகளும் பொருதிய ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாகப் போட்டியிட்டன. நியூகாசல் அணி இரண்டு கோல் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. பின்னர் இரு தரப்பும் தலா மூன்று கோல்கள் புகுத்தியதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. இதையடுத்து கார்டியோலாவின் கருத்து வெளியானது.
தாமஸ் டுக்கல்: புதிய விளையாட்டாளர்கள் தேவையில்லை
லண்டன்: பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணி தோல்வியுற்றதை அடுத்து புதிய விளையாட்டாளர்களை செல்சி அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதை அணியின் நிர்வாகி தாமஸ் டுக்கல் நிராகரித்துள்ளார்.
தற்போதைய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தை வெல்லும் திறன்கொண்டதே என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எதிரணி மிகச் சிறப்பாக ஆடியது என்று சொல்வதைவிடவும் தங்கள் அணி சிறப்பாக ஆடவில்லை என்று சொல்வதே பொருந்தும் என்றார் அவர். இந்தத் தோல்வி தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று டுக்கல் கருத்துரைத்தார்.

