அதிபர் புட்டினின் நண்பர் மகள் டார்யாவைக் கொன்றதாக உக்ரேனைச் சாடும் ரஷ்யா

அதிபர் புட்டினின் நண்பர் மகள் டார்யாவைக் கொன்றதாக உக்ரேனைச் சாடும் ரஷ்யா

1 mins read
66ab126a-c1d7-4992-bd42-e46abcd8ab6a
-

மாஸ்கோ: ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னின் நண்­பர் அலெக்­சாண்­டர் டுகி­னின் மகள் டார்யா டுகினா (படம்) நேற்று கார் வெடி­குண்­டுத் தாக்­கு­த­லில் உயிர்­நீத்­தார்.

உள்­ளூர் நேரப்­படி சனிக்­கி­ழமை மாலை அவர் ஓட்­டிச்­சென்ற கார் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி வெடித்­துச் சித­றி­யது.

உக்­ரே­னிய ராணு­வத்­தின் ரக­சி­யப் பிரி­வி­னர்­தான் இதற்­குக் கார­ணமென ரஷ்­யா­வின் ஃபெடரல் பாது­காப்­புச் சேவை சாடி­யுள்­ளது.

ஆனால் இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்பு ஏதும் இல்லை என்று உக்­ரேன் மறுத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், 1979ஆம் ஆண்­டில் பிறந்த உக்­ரே­னிய மாது இந்­தத் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தா­க­வும் அவர் தனது பதின்ம வயது மக­ளு­டன் சென்ற ஜூலை மாதத்­தில் இருந்து டார்யா தங்­கி­யி­ருந்த குடி­யி­ருப்­பி­லேயே வாடகை வீட்­டில் தங்கி டார்­யா­வின் நட­மாட்­டத்­தைக் கண்­கா­ணித்­த­தா­க­வும் ரஷ்ய அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

டார்­யா­வும் அவ­ரது தந்­தை­யும் கலந்­து­கொண்ட விழா­வி­லும் கலந்­து­கொண்ட அம்­மாது தாக்­கு­த­லுக்­குப் பிறகு எஸ்­டோ­னி­யா­விற்­குத் தப்­பிச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.