பிலிப்பீன்சில் ஈராண்டுக்குப் பின் பள்ளி திரும்பிய மாணவர்கள்

பிலிப்பீன்சில் ஈராண்டுக்குப் பின் பள்ளி திரும்பிய மாணவர்கள்

1 mins read
eb5197e5-84df-4028-baec-01f1f23a3ae6
பிலிப்பீன்ஸ் முழுவதும் மில்லியன் கணக்கான மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பிய வேளையில், மணிலா தொடக்கப் பள்ளியில் கொடி ஏற்றுமுன் தேசிய கீதம் பாடும் மாணவர்கள். படம்: ஏஎஃப்பி -

மணிலா: பிலிப்­பீன்­சில் கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லால் ஈராண்­டு­க­ளா­கப் பள்­ளி­கள் மூடப்­பட்­டி­ருந்­தன. தற்­போது புதிய கல்வி ஆண்­டின் தொடக்க நாளான நேற்று மில்­லி­யன் கணக்­கான மாண­வர்­கள் மீண்­டும் நேரடி வகுப்­பு­க­ளில் பயில அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பள்ளிகள் நீண்­ட­கா­லம் மூடப்­பட்­டி­ருந்­தால் நாட்­டில் கல்வி தொடர்­பான நெருக்­கடி மோச­மா­கும் என்ற எச்­ச­ரிக்­கை­யைத் தொடர்ந்து நேற்று அவை மீண்­டும் திறக்­கப்­பட்­டன.

ஏற்­கெ­னவே, ஒரு வகுப்­பில் அதி­க­மான மாண­வர் எண்­ணிக்கை, பழங்­கா­லக் கற்­பித்­தல் முறை, வறுமை, பள்­ளி­களில் கழிப்­பறை உள்ளிட்ட அடிப்­படை வச­தி­கள் இல்­லாமை போன்ற கார­ணங்­க­ளால் பிலிப்­பீன்­சில் கல்வி நெருக்­கடி நில­வு­வ­தா­கக் குறை­கூ­றப்­படுகிறது.

கிரு­மிப்­ப­ர­வலை முன்­னிட்டு பள்­ளி­கள் மூடப்­பட்­டி­ருந்த கால­கட்­டத்­தில் இணைய வகுப்­பு­கள், அச்­சி­டப்­பட்ட பாடங்­க­ளைத் தொலைக்­காட்சி, சமூக ஊட­கங்­கள் ஆகி­ய­வற்­றில் ஒளி­ப­ரப்­பு­தல் போன்ற நடைமுறை­கள் பின்­பற்­றப்­பட்­டன.

நாட்­டின் புதிய அதி­ப­ராக இரு மாதங்­க­ளுக்கு முன்­னர் பொறுப்­பேற்­றுக்­கொண்ட திரு ஃபெர்டி­னண்ட் மார்­கோஸ் ஜூனி­யர் இந்த ஆண்டு நவம்­பர் மாதத்­திற்­குள் பள்­ளி­க­ளைத் திறக்­கக் கெடு விதித்­தி­ருந்­தார்.

இதற்கு உத­வும் வகை­யில், அர­சாங்­கம் தடுப்­பூ­சித் திட்­டத்தை விரை­வு­ப­டுத்­தி­ய­து­டன் இந்த ஆண்டு இறுதிவரை மாண­வர்­கள் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் இல­வ­ச­மா­கப் பய­ணம் செய்­ய­லாம் என்­றும் அறி­வித்தது.

சென்ற சனிக்­கி­ழமை முதல் செல­வு­க­ளைச் சமா­ளிக்­கத் திண­றும் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு ரொக்க உத­வி­யை­யும் பிலிப்­பீன்ஸ் அர­சாங்­கம் வழங்­கி­வரு­கிறது.