கெர்பாலா: ஈராக்கின் கெர்பாலா வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஷியா முஸ்லிம் வழிபாட்டுத் தலம் ஒன்று சேதமடைந்தது.
இதில் நால்வர் மாண்டதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுவினர் ஆறு பேரை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்டதாகவும் அது குறிப்பிட்டது.
இடிபாடுகளுக்கு இடையே மேலும் யாரும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
புனித நகராகக் கருதப்படும் கெர்பாலாவில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கட்டாரட்-அல்-இமாம் அலி பள்ளிவாசல். நிலச்சரிவால் இதன் கூரை தகர்ந்து விழுந்தது.

