1எம்டிபி மேல் முறையீடு தோல்வி: முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு 12 ஆண்டு சிறை

1எம்டிபி மேல் முறையீடு தோல்வி: முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு 12 ஆண்டு சிறை

1 mins read
cdcfeb19-921b-4eec-9e3f-2f10e79976a4
உச்ச நீதிமன்றத்தில் இன்று (23 ஆகஸ்ட் 2022) தோன்றிய திரு நஜிப் ரஸாக் (படம்: ராய்ட்டர்ஸ்) -
multi-img1 of 2

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்கின் இறுதி மேல் முறையீடு தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு முன்னதாக விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை அவர் எதிர்நோக்கவேண்டும் என்று மலேசியாவின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதோடு, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தையும் அவர் செலுத்தவேண்டும்.

தலைமை நீதிபதி துங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் உள்ளடக்கிய குழு திரு ரஸாக்கின் கோரிக்கையை நிராகரித்தது.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, பணமோசடி, குற்றவியல் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகள் முன்னதாக நிரூபிக்கப்பட்டு திரு ரஸாக்குக்கு 2020ல் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.