மணிலா: வடக்கு பிலிப்பீன்சை நேற்று தாக்கிய கடும் புயலால் அங்குள்ள பள்ளிகளும் அலுவலகங்களும் நேற்று மூடப்பட்டன.
கொவிட்-19 பரவலால் ஈராண்டு களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திங்கட்கிழமைதான் மீண்டும் திறக்கப்பட்டன.
பிலிப்பீன்சின் முக்கிய தீவான லூஸோனை நேற்று காலையில் மா-ஓன் எனும் கடும் புயல் மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது.
மணிலாவின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
மலைகள் நிறைந்த ககாயான் வட்டாரத்திலும் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. மரம் விழுந்து இருவர் காயமுற்றனர். ககாயன் ஆறு பெருக்கெடுத்து ஓடியது.

