எல்லை தளர்வுகள்: ஜப்பான் பரிசீலனை

எல்லை தளர்வுகள்: ஜப்பான் பரிசீலனை

1 mins read
827127f7-03a3-4782-bbe0-ee00c75d8d22
-

தோக்கியோ: ஜப்பானுக்குச் செல்லும் பயணிகள், அதற்கு முன்பு கொவிட்-19 கிருமிப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் எனும் விதிமுறையைத் தளர்த்துவது பற்றி அந்நாடு பரிசீலித்து வருகிறது. உள்ளூர் ஊடகங்கள் இதை நேற்று தெரிவித்தன.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு கிருமிப் பரிசோதனைகள் தேவைப்படாது என்று அறிவிக்கப்படலாம் என்றும் இது அடுத்த சில வாரங்களில் நடப்புக்கு வரலாம் என்றும் நிக்கெய் கூறியது.

தற்போது ஜப்பான் செல்வோர், அதிகபட்சம் 72 மணி நேரத்துக்கு முன்னர் கிருமிப் பரிதோசனை செய்து ஒப்படைக்க வேண்டும்.

மேலும், 20,000 பயணிகள் வரை தினமும் ஜப்பானுக்குள் நுழையலாம். இந்த வரம்பு, அடுத்த மாதத்தில் 50,000ஆக உயர்த்தப்படலாம் எனும் கூறப்பட்டது. ஜப்பானிய அரசாங்கம் இதை உறுதிசெய்ய மறுத்துவிட்டது.