பதவி விலகவுள்ள ஃபவுசி

பதவி விலகவுள்ள ஃபவுசி

1 mins read
8710d0ad-e655-4aff-92f4-ecc3295dc400
-

வாஷிங்­டன்: அமெ­ரிக்க அதி­பர் பைட­னின் தலைமை மருத்­துவ ஆலோ­ச­க­ரான டாக்­டர் ஆண்­டனி ஃபவுசி (படம்) வரும் டிசம்­ப­ரில் பதவி வில­க­வுள்­ளார். கொவிட்-19 பர­வ­லைச் சமா­ளிக்­கும் அமெ­ரிக்­கக் கொள்­கை­களை ஊட­கங்­களில் தோன்றி உலக மக்­க­ளுக்கு விளக்­கி­யதால் டாக்டர் ஃபவுசி தெரிந்த முகம் ஆனார்..

அமெ­ரிக்­கா­வின் தேசிய ஒவ்­வாமை, தொற்­று­நோய் நிலை­யத்­தின் தலை­வ­ரா­க­வும் 1984ஆம் ஆண்டு முதல் பதவி வகிக்­கும் டாக்­டர் ஃபவுசி, அந்­தப் பொறுப்­பி­லி­ருந்­தும் வில­கு­வார் என்று நேற்று கூறப்­பட்­டது.

கடந்த 54 ஆண்­டு­க­ளாக அர­சாங்­கச் சேவை­யில் பணி­யாற்றி வரும் அவர், இது­வரை ஏழு அதி­பர்­க­ளுக்கு மருத்­துவ ஆலோ­ச­க­ராக இருந்­துள்­ளார்.