நஜிப் மகள்: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்

நஜிப் மகள்: நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்

1 mins read
78c9630d-5647-4375-af97-9ff3ff6ba630
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக்­கிற்கு எதி­ரான குற்­றத்­தீர்ப்­பை­யும் தண்­ட­னை­யை­யும் நேற்று மலே­சிய உச்ச நீதி­மன்­றம் உறு­திப்­ப­டுத்­தி­யதை அடுத்து அவர் கோலா­லம்­பூ­ருக்கு வெளியே இருக்­கும் காஜாங் சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­பட்­டார். அங்கு அவர், 12 ஆண்டு காலம் சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விக்க வேண்­டும்.

இத­னி­டையே, தன்­னு­டைய தந்­தைக்­குச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தை­யும் அவர் சிறைச்­சா­லைக்கு அனுப்­பப்­பட்­ட­தை­யும் அறிந்து அதன் தொடர்­பில் நஜிப்­பின் புதல்­வி­யான நூர்­யானா நஜ்வா (படம்: தி ஸ்டார்) நேற்று இன்ஸ்­ட­கி­ரா­மில் கருத்து தெரி­வித்­தார்.

நாங்­கள் கடு­மை­யான போராட்­டங்­களை மேற்­கொள்­ளா­மல் இருந்­தி­ருக்­க­லாம். மலே­சிய நீதி­மு­றை­யில் முழு நம்­பிக்­கையை நாங்­கள் வைத்­தி­ருந்து இருக்­க­லாம். இருந்­தா­லும் உங்­க­ளுக்கு (நஜிப்­புக்கு) இன்று நீதி கிடைக்­க­வில்லை. உங்­க­ளுக்கு போரா­டு­வ­தற்­கான வாய்ப்பு கிடைக்­க­வில்லை. நான் உறு­தி­பட கூறு­கி­றேன். நீதி கிடைக்­கும் வரை நானும் என்­னு­டைய தாயா­ரும் குடும்­பத்­தி­ன­ரும் மக்­களும் ஒரு­போ­தும் ஓயப்­போ­வ­தில்லை என்று அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.

இத­னி­டையே, மத்­திய நீதி­மன்ற தீர்ப்பை அடுத்து நேற்று மாலை சுமார் 6.10 மணிக்கு நஜிப் ரசாக் காஜாங் சிறை­யைச் சென்­ற­டைந்­தார்.

முன்­ன­தாக அவ­ரு­டைய வாக­னங்­கள் அந்த சிறைச்­சாலை வளா­கத்­திற்­குள் நுழைய முடி­யா­மல் திருப்­பி­வி­டப்­பட்­ட­தைக் காண முடிந்­தது. சிறைச்­சாலை நுழைவு வாயில் அருகே சாலை­யோ­ர­மாக பல­ரும் கூடி இருந்­த­தை­யும் காண முடிந்­தது.