5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி

5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி

1 mins read
63f446b0-988b-4ca6-8b78-62ba55ffc148
-

ஐந்து முதல் 11 வயதுடைய சிறார்கள் இனி கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இறுதி காலாண்டுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படும்.

அதே வேளையில் ஆறு மாதங்களுக்கும் ஐந்து வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய சிறார்களுக்கும் சொவிட்-19 தடுப்பூசிகள் கூடிய விரைவில் வழங்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மொடெர்னா ஸ்பைக்வாக்ஸ் கொவிட்-19 தடுப்பூசி இளம் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளதௌ அமைச்சுகள்நிலை பணிக்கு இன்று(ஆகஸ்ட் 24) தெரிவித்தது.

இவ்வாண்டின் இறுதி காலாண்டின் ஐந்து முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போடுவதற்கு சுகாதார அமைச்சு ஆயத்தமாகி வருகிறது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் குறிப்பிட்டார்.

கூடுதல் விவரங்கள் விரைவில் கொடுக்கப்படும்.