நஜிப்புக்கு சிறையில் சிறப்பு வசதி கொடுக்கப்படாது

நஜிப்புக்கு சிறையில் சிறப்பு வசதி கொடுக்கப்படாது

1 mins read
03fdbdd7-3d01-495f-8e98-22ddafc9b8f0
படம்: பேஸ்புக் -

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என வெளிவந்த வதந்திகளை அந்நாட்டு சிறைப் பிரிவு மறுத்துள்ளது.

ஒரு சிறை அறையில் ஒரு தொலைக்காட்சி, மூன்று படுக்கைகள், மேசை, போன்ற வசதிகள் இருக்கும் ஒரு புகைப்படம் சமூகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுதான் நஜிப்பின் சிறை அறை என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவியது. இந்த படத்தை சிறை பிரிவு பதிவேற்றம் செய்து, 'வதந்திகளை பரப்ப வேண்டாம்' என்று அந்த படத்துக்கு கீழ் பதிவிட்டது.

1எம்டிபி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தைத் தொடர்ந்து திரு நஜிப் காஜாங் சிறைச்சாலைக்கு உடனடியாக கொண்டுசெல்லப்பட்டார்.

இன்று காலை சிறைச்சாலை அமைதியாக காணப்பட்டதாகவும் சில ஊடகக்காரர்கள் மட்டுமே மதியம் அங்கு சென்றதாகவும் மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டன.