தென்கொரியாவில் மக்கள்தொகை பாதியாகும் அபாயம்

தென்கொரியாவில் மக்கள்தொகை பாதியாகும் அபாயம்

1 mins read
3c134610-0499-4963-8d38-a67920fe042f
-

சோல்: உல­க­ள­வில் தென்­கொ­ரி­யா­வில்­தான் பிறப்பு விகி­தம் ஆகக் குறை­வாக இருந்­து வருவதுடன் அது மேலும் குறைந்துள்ளது. இந்­நிலை தொடர்ந்­தால் இந்த நூற்­றாண்­டுக்­குள் தென்கொரியாவின் மக்­கள்­தொகை பாதிக்­கும் மேல் குறை­யக்­கூ­டும் என கணிக்­கப்­பட்டுள்­ளது.

சென்ற ஆண்­டுக்­கான புள்ளி விவ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தென்­கொ­ரிய பெண்­கள் தங்­க­ளின் வாழ்­நா­ளில் 0.81 குழந்­தை­களை மட்­டுமே பெற்­றெ­டுக்­கின்­ற­னர். ஓராண்­டுக்கு முன்பு இந்த விகி­தம் 0.84ஆக இருந்­த­தென புள்ளி விவர அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

சென்ற ஆண்டு தென்­கொ­ரி­யா­வில் பிறந்த குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை 260,600க்குக் குறைந்தது.

இந்த எண்­ணிக்கை அந்­நாட்­டின் மக்­கள்­தொ­கை­யில் ஏறத்­தாழ 0.5 விழுக்­காடு.