வாஷிங்டன்: உக்ரேனுக்கான மூன்று பில்லியன் டாலர் (நான்கு பில்லியன் வெள்ளி) மதிப்புள்ள தற்காப்புத் திட்டத்தை அமெரிக்கா அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ உதவித் திட்டம் நேற்றே அறிவிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்தது. இந்த காலகட்டத்தில் இதுவே கியவுக்கு வழங்கப்படும் ஆக அதிக மதிப்புள்ள உதவித் திட்டம்.
நேற்று உக்ரேனின் சுதந்திர தினம். அதையொட்டி உதவித் திட்டத்தை வழங்குவது இலக்கு.
இதுவரை உக்ரேன் ராணுவத்திற்கு வழங்கப்படாத ஆயுதம் எதுவும் புதிய திட்டத்தில் இடம்பெறுவதுபோல் தெரியவில்லை என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி சொன்னார்.