வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் சீனா போகலாம்

வெளிநாட்டு மாணவர்கள் மீண்டும் சீனா போகலாம்

1 mins read
24047888-bbd5-4a14-8d06-bd3c2a5a37dd
-

பெய்­ஜிங்: ஈராண்­டுகளுக்கும் மேலான கால­கட்­டத்­திற்­குப் பிறகு சீனா மீண்­டும் வெளி­நாட்டு மாண­வர்­களுக்­குத் தனது எல்­லை­க­ளைத் திறந்­துள்­ளது. அதன்­படி சீனா­வில் தங்­கு­வ­தற்­கான அனு­மதி வைத்­தி­ருப்­போ­ரும் 'ஏபெக்' வர்த்­தக பயண அட்­டையை வைத்­தி­ருப்­போ­ரும் சீனா செல்­ல­லாம்.

நேற்று முதல் இந்த மாற்­றம் நடப்­புக்கு வரும் என்று சீனா­வில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கம் 'வீசாட்' தளத்­தில் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தது. ஜப்­பான், இந்­தியா போன்ற நாடு­களில் இருக்­கும் சீனத் தூத­ர­கங்­களும் இது­போன்ற அறிக்­கை­களை வெளி­யிட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

வெளி­நாட்டு மாண­வர்­களை அனு­ம­திப்­ப­தால் சீனா அதன் கடு­மை­யான கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­ய­தா­கவோ கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் ஒழிக்­க­வேண்­டும் என்ற அதன் அணு­கு­முறை மாறி­விட்டதாகவோ பொருளாகாது என்று அந்நாட்டு அரசாங்கத்தின் குளோபல் டைம்ஸ் ஊடகம் சொன்னது.