தனது கால்சட்டையில் 60 விலங்குகளை கடத்த முயன்ற கடத்தல்காரனை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆமைகள், முதலை குஞ்சுகள், பல்லிகள், பாம்புகள் போன்ற விலங்குகளை தனது கால்சட்டையில் ஒளித்துவைத்து மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்த முயன்றபோது, கடத்தல்காரன் பிடிபட்டான்.
பிடிபட்டபோது தன்னிடம் சில செல்ல பிராணிகள் மட்டுமே இருந்ததாக கடத்தல்காரன் கூறியுள்ளான். அவனை சோதனை செய்தபோது விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் மூன்று விலங்குகள் இறந்துகிடந்தன.
கடந்த ஆறு ஆண்டுகளாக மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் 1,700க்கும் அதிகமான விலங்குகளை கடத்தும் திட்டத்தை குற்றவாளி தீட்டியதாக நம்பப்படுகிறது.

