தோக்கியோ: ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் படுகொலைக்குப் பொறுப்பேற்கும் விதமாக, அந்நாட்டின் தேசிய காவல்துறைத் தலைவர் பதவியிலிருந்து திரு இத்தாரு நகாமுரா நேற்று விலகினார்.
"எங்களது பாதுகாப்புப் பணிகளைப் புத்தம் புதிதாக தொடங்க முடிவெடுத்தோம். எனவேதான், தேசிய பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையத்திடம் எனது பதவி விலகலை நான் சமர்ப்பித்தேன்," என்று திரு இத்தாரு செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது திரு அபே சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.
திரு அபே, ஜப்பானின் பிரபலமான அரசியல் தலைவருமாகவும் நீண்டகால பிரதமராகவும் இருந்தார்.

