கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யத் திட்டம்

கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யத் திட்டம்

2 mins read
10e2d677-1228-4f8c-b48a-ccb80ad2f4b3
-

அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் 43 மில்லியன் அமெரிக்கர்களுக்கு நற்செய்தி

வாஷிங்­டன்: குறைந்த, நடுத்­தர வரு­மா­னம் ஈட்­டு­வோ­ருக்கு US$10,000 (S$14,000) மாண­வர் கல்­விக் கட­னைத் தள்­ளு­படி செய்­யும் திட்­டத்தை அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் அறி­வித்­துள்­ளார்.

இது 43 மில்­லி­யன் வரை­யி­லான அமெ­ரிக்­கர்­க­ளுக்கு நிம்­ம­திப் பெரு­மூச்சு தரும்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் ஆண்­டுக்கு US$75,000க்கும் குறை­வாக வரு­மா­னம் ஈட்­டு­கின்­ற­னர். கடன் தள்­ளு­ப­டிக்கு தகு­தி­பெற ஒரு­வர் ஆண்டு வரு­மா­ன­மாக US$125,000க்கும் குறை­வாக ஈட்ட வேண்­டும்.

நாடாளுமன்றம் மற்­றும் செனட் சபை­யின் கட்­டுப்­பாட்­டைத் தக்­க­வைத்­துக்­கொள்ள ஜன­நா­ய­கக் கட்­சி­யி­ன­ருக்கு இத்­திட்­டம் கைகொடுக்­கக்­கூ­டும் என்­றா­லும், வெவ்­வேறு தரப்­பி­னர் இதைக் குறை­கூ­ற­வும் செய்­கின்­ற­னர்.

கடன் தள்­ளு­படி அதி­க­மாக இருப்­ப­தாக குடி­ய­ர­சுக் கட்­சி­யி­னர் விமர்­சிக்­கின்­ற­னர்.

கடன் தள்­ளு­ப­டிக்கு ஆத­ர­வுக் குரல் தரு­வோர் இத்­தொகை குறை­வாக இருப்­ப­தா­கக் கூறு­கின்­ற­னர். இத்­திட்­டம் பண­வீக்­கத்தை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­பது பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் சில­ரின் கருத்து.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக, மாண­வர் கடன் தவ­ணையை டிரம்ப் நிர்­வா­கம் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­தி­ருந்­தது. திரு பைடன் அதை ஆண்­டி­றுதி வரை நீட்­டித்­துள்­ளார்.

குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோர் மாதந்­தோறும் செலுத்­தும் கடன் தொகை­யைக் குறைப்­பது உள்­ளிட்­டவை இதர சீர்­தி­ருத்­தங்­களில் சில.

"குறிப்­பிட்ட சில பிரி­வி­னரை இலக்­கா­கக் கொண்டு வழங்­கப்­படும் இந்த உதவி, பெருந்­தொற்று கார­ண­மாக பெரி­தும் பாதிக்­கப்­பட்டுள்ள குறைந்த, நடுத்­தர வரு­வாய் ஈட்­டு­வோ­ருக்­கா­னது," என்று வெள்ளை மாளி­கை­யில் திரு பைடன் கூறி­னார்.

மாணவர் கல்­விக் கடனை ரத்து செய்­யும் இத்­திட்­டம், வசதி குறைந்­த­வர்­களுக்­கும் பணக்­கா­ரர்­க­ளுக்­கும் இடை­யே நிலவும் இன ரீதி­யி­லான இடை­வெ­ளி­யைக் குறைக்க உதவும் என வெள்ளை மாளிகை வாதிட்­டது.

கறுப்­பின மாண­வர்­களே பொது­வாக அதிக கல்­விக் கடனைப் பெறு­கின்­ற­னர்.