இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது. இதன்மூலம் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி தேசிய அளவில் பேரணிகளை அவர் நடத்தலாம்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான அவருக்கு மக்கள் தொடர்ந்து பரவலாக ஆதரவு அளித்து வருகின்றனர்.
பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் அரசாங்கத்திற்கு எதிராக இம்ரான் கான் பேரணிகளை நடத்தியுள்ளார்.
அமெரிக்கா சம்பந்தப்பட்ட சதித்திட்டத்தாலேயே தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டதாக இம்ரான் கான் கூறி வருகிறார்.
பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவாக பருவமழை பெய்துள்ள வேளையில் நிலவரத்தைக் கையாள அரசியல் தலைவர்கள் தடுமாறி வருகின்றனர்.
மோசமான வானிலை காரணமாக ஜூன் முதல் இதுவரை 903 பேர் இறந்துவிட்டனர்.

