தாய்லாந்தின் இடைக்காலப் பிரதமருக்கும் ராணுவப் பின்னணி

தாய்லாந்தின் இடைக்காலப் பிரதமருக்கும் ராணுவப் பின்னணி

1 mins read
6b5da72c-f137-440b-8881-ab52bff6f758
-

பேங்­காக்: தாய்­லாந்து அர­சி­ய­லில் ராணுவ ஆதிக்­கத்தை முடி­வுக்­குக் கொண்­டு­வர முற்­படும் எதிர்க்­கட்சிக்காரர்­க­ளைப் பொறுத்­த­வரை, தாய்­லாந்­தின் புதிய தற்­கா­லி­கத் தலை­வ­ரான பிர­வித் வோங்­சு­வன் (படம்), பிர­தமர் பத­வி­யி­ல் இ­ருந்து பணி இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டு உள்ள பிர­யுத் சான் ஓ சான்­னி­டம் இருந்து அவ்­வ­ளவு வேறு­பட்­ட­வராக இல்லை.

2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒரு ராணு­வத் தலை­வ­ராக திரு பிர­யுத்­தின் பத­விக்­கா­லம், அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்­தின்­படி பிர­த­மர் பதவி வகிக்­கும் எட்டு ஆண்­டு­கால தவ­ணைக்­கா­லத்­தின் கணக்­கில் சேர்க்­கப்­ப­டுமா என்­பது பற்றி நீதி­மன்­றம் முடி­வெ­டுக்­கும்.

2019 முதல் துணைப் பிர­த­மராக பதவி வகித்து வந்­துள்ள திரு பிர­வித், 77, திரு பிர­யுத்­தின் நீண்­ட­கால நண்­ப­ராக உள்­ளார். மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்­தைக் கவிழ்த்து 2014ல் தொடங்­கிய திரு பிர­யுத்­தின் கிட்டத்தட்ட ஐந்­தாண்­டு­கால ராணுவ ஆட்சி­யில் திரு பிர­வித் இடம்­பெற்று இ­ருந்­தார்.

திரு பிர­யுத்­தைப் போலவே திரு பிர­வித்­தும் முன்­னாள் ராணு­வத் தலை­வ­ரா­வார். ராணுவ ஆட்­சிக்கு இவர் மிக­வும் விசு­வா­ச­மாக இருந்­தார்.