பெய்ஜிங்: கடுமையான வெப்பம் காரணமாக சீனாவின் பாதிப் பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான சீனாவில் கடும் வெப்பம், திடீர் வெள்ளம், வறட்சி என பருவநிலை மாறி மாறி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்தப் பாதிப்பு அடிக்கடி தொடரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெப்பநிலையைப் பதிவுசெய்யும் நடைமுறை தொடங்கியதில் இருந்து தென்சீனாவில் வெப்பம் இந்த அளவுக்குப் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை என்று வேளாண்துறை அமைச்சு இந்த வாரம் கூறியது.

