இந்திய 'கிக் பாக்ஸிங்' வீரர் மரணம்

இந்திய 'கிக் பாக்ஸிங்' வீரர் மரணம்

1 mins read
66322e39-9642-4f7f-9d67-248cfdea43e2
-

புது­டெல்லி: சென்­னை­யில் நடை­பெற்ற தேசிய அள­வி­லான 'கிக் பாக்­ஸிங்' போட்­டி­யில் தலை­யில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக இந்திய வீரர் யோரா டேட், 24, உயிரிழந்­தார். அவர் இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற இறு­திப் போட்­டி­யில் கேசவ் முடல் எனும் வீரர் யோரா­வின் தலை­யில் உதைத்­த­தில் யோரா மயங்கி விழுந்­தார்.

யோரா­விற்கு உட­ன­டி­யாக முத­லு­தவி வழங்­கப்­பட்­டது. மூளை­யில் அவ­சர அறுவை சிகிச்சை செய்­வதற்­காக அவர் மருத்­து­வ­மனைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

ஆனால், இரு நாள்­கள் கழித்து சிகிச்சை பல­னின்றி அவர் உயிர் இ­ழந்­தார்.

அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த தற்­காப்­புக் கலை வீர­ரான யோரா, 'கிக் பாக்­ஸிங்' அமைப்பு­களுக்­கான உல­கச் சங்­கத்­தின் இறு­திப் போட்­டிக்­குத் தகு­தி­பெற்று இருந்­தார்.

அவ­ரது மர­ணம் குறித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். அவ­ரது உட­லைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அதி­கா­ரி­கள் ஏற்­பாடு செய்தனர்.