உடும்பு சட்டி சோறு: ஒரு பிடி பார்க்க தயாரா?

உடும்பு சட்டி சோறு: ஒரு பிடி பார்க்க தயாரா?

1 mins read
b3f93b2b-a1b6-434d-8fc4-97a553dd7acf
படம்: KLFoodie/பேஸ்புக் -

கோழி, இறைச்சி, இறால், கணவாய், காட்டுப்பன்றி. இவை அனைத்தும் சட்டி சோறு உணவு வகையில் பரிமாறப்படும் மாமிச வகைகள். இந்த வரிசையில் இப்போது உடும்பு இறைச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் சட்டி சோறுக்கு பிரபலமானது 'சட்டிசோறு லோக் இயூ' கடை. இங்கு பலவிதமான சட்டி சோறு சமைக்கப்படுகிறது. இப்போது சுடச்சுட உடும்பு சட்டி சோறும் கிடைக்கிறது.

இலைகள், பழங்களை மட்டுமே உடும்புகள் சாப்பிடுவதால், அவற்றை மனிதர்கள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்று கூறப்படுகிறது. மலேசியாவில் சில வகை உடும்புகள் பாதுகாக்கப்பட்ட விலங்குகள். அவற்றை மாமிசத்துக்காக பிடித்து கொல்வதற்கு உரிமம் பெற்றிருக்கவேண்டும்.

இவ்வளவு சிரமப்பட்டு உடும்பை பிடித்து, அதை சுவையான சட்டி சோறாக சமைப்பதென்றால், விலை என்னவாக இருக்கும்? 'சட்டிசோறு லோக் இயூ' கடையின் விலைகள் இணையத்தில் இல்லை. ஆனால் மலேசியாவில் உடும்பு மாமிசத்தின் விலை கோழியைவிட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

வித்தியாசமான மாமிச வகைகளை விரும்புவோர் இந்த சட்டி சோறை ஒரு (உடும்பு) பிடி பிடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.