$2.5 மி. செலவில் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு

$2.5 மி. செலவில் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு

1 mins read
8e79a7a3-74f8-4a3c-9861-f9b943ab95b3
படம்: ராய்ட்டர்ஸ் -

மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்குக்கு ஜப்பான் அரசாங்கம் $2.5 மில்லியனை செலவளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திரு அபே ஜூலை 8ஆம் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

அபேயின் அதிகாரபூர்வ இறுதிச் சடங்கு வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று தலைநகர் தோக்கியோவில் நடைபெறும்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட பல உலக தலைவர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வர் என்று கூறப்பட்டது. ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இதில் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.