பிரேசிலின் அமேசான் காடுகள் கொளுந்துவிட்டு எரிகின்றன. 15 ஆண்டுகளில் காணாத அளவுக்கு காடுகளில் தீ பரவிவருகிறது. உலகின் ஆகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் அழிவை நோக்கி செல்வதற்கு இது ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது
அமேசானில் 3,358 தீச் சம்பவங்கள் துணைக்கோள் கண்காணிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சமார் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாவ் பாலோ நகரத்தில் அடர்ந்த கரும்புகை தென்பட்டது.
திங்கட்கிழமை மூண்ட தீ வேண்டுமென்றே ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மூட்டப்பட்டதாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர். விலங்குகள் வளர்ப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் காடுகளின் பல பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
இந்த மாதம் மட்டும் பிரேசிலின் அமேசான் காடுகளில் 24,000க்கும் மேற்பட்ட தீச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

