சீனாவில் என்றுமில்லாத அளவுக்கு சுட்டெரிக்கிறது வெயில். பல மாநிலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. இதனால் வெப்பத்தில் அதிகம் வாடுவது முதியோர்களே. வெப்பத்தை தணிக்க அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு படையெடுத்துள்ளனர். சீன சமூகத் தளம் ஒன்றில் சீன முதியோர் பலர் ஓர் இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் காணொளி ஒன்று பகிரப்பட்டது. உற்றுப்பார்த்தால் அவர்கள் இருப்பது ஒரு பல்பொருள் அங்காடி என்று தெரிகிறது. இதுபோன்ற அங்காடிகளில் மாமிசம், காய்கறிகள் போன்றவை இருப்பதால், குளிர்சாதன வசதிகள் கட்டாயம் இருக்கும் என்ற காரணத்தினால்தான் பலர் இங்கு வந்து ஓய்வெடுக்கின்றனர். அங்காடியில் எங்கெங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கு ஒரு இடத்தை பிடித்துள்ளனர் இந்த வயோதிகர்கள்.
கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க சில்லென்ற குளுகுளு வசதியில் சில மணிநேரம் ஓய்வெடுப்பது சற்று இதமானது தானே.
இதுபோன்ற காட்சிகள் சீனா முழுவதும் அன்றாட காட்சியாகிவிட்டதாக சீன நாளிதழ் ஒன்று குறிப்பிட்டது.

