இந்தோனீசியாவில் எரிபொருள் விலை 40% கூடலாம்

இந்தோனீசியாவில் எரிபொருள் விலை 40% கூடலாம்

2 mins read
6810b509-baed-4b52-ab31-b37e62ed7f7a
இந்தோனீசியாவின் தங்கராங் நகரில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பும் பெட்ரோல் நிலைய ஊழியர். படம்: இபிஏ -

ஜகார்த்தா: சலுகை விலை­யில் விற்­கப்­பட்­டு­வ­ரும் எரி­பொ­ருள் விலையை இந்­தோ­னீ­சியா 30லிருந்து 40 விழுக்­காடு வரை உயர்த்­தக்­கூ­டும். சலு­கை­க­ளுக்­காக அர­சாங்­கம் ஒதுக்­கும் தொகை தொடர்பில் எரி­பொ­ருள் விலை உயர்வு குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­வ­தாக அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வின் ஆளும் கூட்­ட­ணி­யில் உள்ள அர­சி­யல்­வா­தி­கள் ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் கூறி­னர்.

இவ்வாரத் தொடக்­கத்­தில் இந்­தோ­னீ­சிய அர­சாங்­கத்­தின் கச்சா எண்­ணெய் நிறு­வ­ன­மான பெர்த்­தா­மி­னா­வு­டன் நடை­பெற்ற ரக­சிய நாடா­ளு­மன்றச் சந்­திப்­பில் இத்­தகவலைப் பெற்­ற­தாக நாடா­ளு­மன்­றத்­தின் எரி­சக்திக் குழு­வின் துணைத் தலை­வர் எடி சொவெப்­பார்னோ கூறி­னார்.

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் ஆகப் பெரிய பொரு­ளி­ய­லான இந்­தோ­னீ­சி­யா­வில் இவ்­வாண்­டுக்­காக எரி­சக்தி சலு­கைக்­கென ஒதுக்­கப்­பட்­டி­ருந்த தொகை மும்­ம­டங்­காகி 502 டிரில்­லி­யன் ருப்­பி­யா­விற்­குக் கூடி­யுள்­ளது. இந்­தத் தொகை, ஒட்டு­மொத்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இடம்பெறும் தொகையில் சுமார் 16 விழுக்­காடு.

உல­க­ள­வில் கச்சா எண்­ணெய் விலை கூடுவதாலும் ருப்­பி­யா­வின் மதிப்பு குறைந்து வரு­வ­தா­லும் இந்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. எரி­பொருள் விலையை உயர்த்­தா­விட்டால் சலு­கை­களுக்கென கூடு­தல் பணம் தேவைப்­படும் என்று இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் குறிப்­பிட்­டிருந்தது.

எரி­பொ­ருள் விற்­ப­னை­யில் சில கட்­டுப்­பா­டு­களைக் கொண்­டு­வ­ரு­தற்­கும் பெர்த்­தா­மினா ஆத­ரவு தருவதாகத் திரு எடி கூறி­னார். பெரிய இயந்­தி­ரங்­களில் இயங்­கும் வாக­னங்­களை ஓட்­டு­வோர் சலுகை விலை­யில் எரி­பொருள் வாங்­கு­வதைத் தடை செய்­வது பரிந்­து­ரைக்­கப்­பட்­ட கட்டுப்­பா­டு­களில் ஒன்று.

"இது (விலையை உயர்த்தி விற்­ப­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வது) மக்­க­ளுக்கு ஆகக் குறை­வான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எங்கள் கருத்து," என்று திரு எடி சொன்­னார். இந்­தோ­னீ­சி­யா­வின் பண­வீக்க விகி­தம் கடந்த ஏழாண்டு­களில் காணாத அளவு சென்ற மாதம் 4.94 விழுக்­காட்­டைத் தொட்­டது. எனினும், சலு­கை­க­ளால் வளர்ந்த நாடு­களில் பதி­வா­வ­தை­யும்­விட இந்­தோ­னீ­சி­யா­வின் பண­வீக்க விகி­தம் மிகவும் குறைவு.