தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரேசில் அமேசான் காட்டில் 15 ஆண்டுகள் இல்லாத தீ

1 mins read
890a01b3-57b1-4284-a055-07b6ab867cee
-

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் இருக்கும் பகுதியில் உள்ள அமேசான் காட்டில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இல்லாத அளவில் காட்டுத்தீ கடந்த வாரம் கொழுந்துவிட்டு எரிந்தது. கடந்த திங்கட்கிழமையன்று காட்டின் 3,358 இடங்களில் தீ எரிந்துகொண்டிருந்தது கண்டறியப்பட்டது. 24 மணிநேரத்தில் இத்தனை இடங்களில் காட்டுத்தீ மூண்டது இதுவே முதல்முறை என்று 'ஐஎன்பிஇ' எனும் பிரேசிலின் விண்வெளி நிலையம் குறிப்பிட்டது. பிரேசிலில் காடுகள் அழிக்கப்படும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

படம்: ஏஎஃப்பி