விளையாட்டுத் துளிகள்

வெளியேற்றப்பட்டார் லோ

சிங்கப்பூர்: உலக பூப்பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவிலிருந்து சிங்கப்பூர் நட்சத்திரம் லோ கியன் இயூ வெளியேற்றப்பட்டுள்ளார். நடப்பு வெற்றியாளரான லோ தாய்லாந்தின் குன்லாவுட் விட்டிட்சார்னிடம் 21-12, 17-21, 21-8 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்தார்.

"ஆட்டத்தில் என்னால் முடிந்தவரை முயற்சி செய்ததால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. அவர் (குன்டவுட்) மூன்றாவது ஆட்டத்தை சரிவரக் கையாள என்னைவிடத் தயாராக இருந்தார். அந்த அம்சத்தில் நான் என்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்," என்று லோ கூறினார்.

பென்ஸீமா, அன்சலொட்டிக்கு விருது

இஸ்தான்புல்: ஸ்பெயினின் பிரபல காற்பந்து அணியான ரியால் மட்ரிட்டின் பிரெஞ்சு நட்சத்திரம் கரீம் பென்ஸீமாவிற்கு (படத்தில் இடது) ஐரோப்பாவின் ஆகச் சிறந்த விளையாட்டாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ரியால் பயிற்றுவிப்பாளரான இத்தாலியைச் சேர்ந்த கார்லோ அன்சலொட்டி (படத்தில் வலது) ஐரோப்பாவின் ஆகச் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதைத் தட்டிச் சென்றார்.

ரியால் 14வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்த இருவருக்கும் யுயேஃபா எனும் ஐரோப்பிய காற்பந்து ஒன்றியம் விருது வழங்கி கௌரவித்தது.

கடந்த சில ஆண்டுகளாக சற்று களையிழந்துபோயிருந்த அன்சலொட்டி சென்ற பருவம் அதிரடியாக மீண்டு வந்தார்.

முன்னைய அணிகளுடன் மோதவுள்ள ஹாலண்ட், லெவண்டொவ்ஸ்கி

இஸ்தான்புல்: இந்தப் பருவத்தின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் சுற்றில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக் அணியும் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும் மோதவிருப்பது உறுதியாகியுள்ளது. பயர்னின் முன்னாள் நட்சத்திரமான போலந்து வீரர் ராபர்ட் லொவண்டோவ்ஸ்கி தற்போது பார்சிலோனாவில் இருக்கிறார். இவ்விரு அணிகளும் 'சி' பிரிவில் இரண்டு முறை சந்திக்கும்.

அதேபோல நார்வே நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் விளையாடும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி, அவரின் முன்னைய அணியான ஜெர்மனியின் பொருசியா டாட்மண்டை 'ஜி' பிரிவில் இரு முறை சந்திக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!