வாஷிங்டன்: அமெரிக்காவிலிருந்து பிற இடங்களுக்குப் போகும் சீனாவின் 26 விமானச் சேவைகளைத் தற்காலிகமாக ரத்து செய்யப்போவதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களின் தொடர்பில் சீனா சில அமெரிக்க விமானச் சேவைகளை ரத்து செய்ததற்குப் பதிலடியாக இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.
சியாமென் ஏர்லைன்ஸ், ஏர் சைனா, சைனா சவுதர்ன் ஏர்லைன்ஸ், சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் விமானச் சேவைகள் அடுத்த மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை ரத்து செய்யப்படும். லாஸ் ஏஞ்சலிஸ், நியூயார்க் நகரங்களிலிருந்து புறப்படும் மொத்தம் 26 விமானச் சேவைகள் அவற்றில் அடங்கும்.

