ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கிற்கு $2.5 மி.

ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கிற்கு $2.5 மி.

1 mins read
a9270edf-d633-433b-895f-0f82a1670f0b
-

தோக்­கியோ: கொல்­லப்­பட்ட முன்­னாள் ஜப்­பா­னிய பிர­த­மர் ஷின்சோ அபே­யின் அதி­கா­ர­பூர்வ இறு­திச் சடங்கு 250 மில்­லி­யன் யென் (2.54 மில்­லி­யன் வெள்ளி) செல­வில் நடத்­தப்­படும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

சென்ற மாதம் எட்­டாம் தேதி­யன்று தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­ட­போது திரு அபே சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இறு­திச் சடங்கு உட­ன­டி­யாக நடை­பெற்­றி­ருந்­தா­லும் அதி­கா­ர­பூர்வ இறு­திச் சடங்கை அடுத்த மாதம் 27ஆம் தேதி­யன்று நடத்த ஜப்­பான் முடிவு செய்­தது. அது இறு­திச் சடங்கு தோக்­கி­யோ­வின் நிப்­போன் புடோக்­கான் வளா­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

திரு அபே­யின் அதி­கா­ர­பூர்வ இறு­திச் சடங்கிற்கான தொகை முழு­வ­தும் அர­சாங்க நிதி­யி­லி­ருந்து ஈட்­டப்­படும் என்று தற்­போ­தைய ஜப்­பா­னிய பிர­த­மர் ஃபுமியோ கிஷிடா கூறி­னார்.

திரு அபே, ஜப்­பா­னி­லும் அனைத்­து­லக அள­வி­லும் மிகுந்த மரியாதைக்கு உரியவர் என்­றும் அவரின் மறைவுக்குப் பலர் அனு­தா­பம் தெரி­வித்­த­தா­க­வும் ஜப்­பா­னின் தலைமை நாடா­ளு­மன்றச் செய­லா­ளர் ஹிரொக்­காஸு மட்­சுனோ செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சொன்­னார். அதற்கு உகந்த வகை­யில் அதி­கா­ர­பூர்வ இறு­திச் சடங்கை நடத்த அர­சாங்­கம் முடி­வெ­டுத்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.