ஃபைசர் மீது வழக்கு தொடுத்த மொடர்னா

கொவிட்-19 தடுப்பூசிகளுக்கான தனது கண்டுபிடிப்பை ஃபைசர், பயோஎன்டெக் நிறுவனங்கள் அனுமதியின்றி பயன்படுத்தியதாக அவ்விரு நிறுவனங்களின் மீதும் மொடர்னா வழக்கு தொடுத்துள்ளது.

மதிநுட்பச் சொத்து விதிமுறைகளை மீறி தனக்குச் சொந்தமான எம்ஆர்என்ஏ முறையைப் பயன்படுத்தி ஃபைசரும் ஜெர்மனியின் பயோஎன்டெக்கும் கொமிர்னாட்டி தடுப்பூசியை உருவாக்கின என்பது மொடர்னாவின் வாதம்.

மூன்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள். 

ஃபைசர், பயோஎன்டெக் இரண்டும் சேர்ந்து உருவாக்கிய கொவிட்-19 தடுப்பூசியை விற்பதற்குத் தடை விதிக்க தான் நீதிமன்றங்களிடம் கேட்டுக்கொள்ளவில்லை என்று மொடர்னா கூறியது.

இவ்வாண்டு மார்ச் எட்டாம் தேதியிலிருந்து தற்போதைய காலகட்டம் வரைக்குமான இழப்பீட்டுத் தொகையைப் பெற மொடர்னா விரும்புகிறது.

92 குறைந்த வருமான, நடுத்தர நாடுகளுக்கு விற்கப்பட்ட ஃபைசரின் தடுப்பூசிகளுக்கு இழப்பீடு கேட்கப்போவதில்லை என்றும் மொடர்னா குறிப்பிட்டது.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!