நைஜீரியாவில் வெளிநாட்டு விளம்பர நடிகர்களுக்குத் தடை

நைஜீரியாவில் வெளிநாட்டு விளம்பர நடிகர்களுக்குத் தடை

1 mins read

தொலைக்காட்சி விளம்பரங்களில் வெளிநாட்டு நடிகர்கள் இடம்பெறுவதைத் தடை செய்துள்ள முதல் நாடாக நைீஜீரியா விளங்குகிறது.

உள்ளூரில் திறமையானவர்களுக்கு வாய்ப்பளித்து அங்கீகரிக்க நைஜீரிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

புதிய சட்டம் இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

அதற்குப் பிறகு நைஜீரியாவில் தற்போது வேலை செய்துவரும் வெளிநாட்டு விளம்பர நடிகர்கள், விளம்பரங்களுக்குப் பின்னணி குரல் கொடுப்பவர்கள் ஆகியோருக்கு வேலை இருக்காது.