போர்ச்சுகலில் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்தில் ஒரு ராட்சத டைனசோரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போர்ச்சுகலின் பொம்பல் நகரில் இந்த எலும்புக்கூடு காணப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஓர் ஆடவர் தனது வீட்டுக்கான கட்டுமானப் பணியைத் தொடங்கியபோது இந்த செளரோபோட் வகை டைனசோர் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதன் முதுகெலும்பு உள்ளிட்ட பாகங்களை எடுத்து ஆராயத் தொடங்கினர்.
இந்த டைனசோரின் உயரம் 12 மீட்டராகவும் உடலின் நீளம் 25 மீட்டராகவும் இருந்திருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

