'2050ல் அணுசக்தி உற்பத்தி இரட்டிப்பாகும்'

1 mins read
82b6047f-fe0f-4b2d-b56f-b36009b75b4f
-

பாரிஸ்: எரி­சக்­தியை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான செல­வு­கள் அதி­க­ரித்து வரு­வ­தால், அதற்­கான மாற்று வழி­க­ளைக் கண்­டு­பி­டிக்க உலக நாடு­கள் மும்­மு­ர­மாக உள்­ளன. இத­னால், உல­கம் முழு­வ­தும் அணு­சக்தி மீதான ஆர்­வம் அதி­க­ரித்­துள்­ளது.

ஜப்­பா­னின் ஃபுக்‌குஷி­மா­வில் 2011ல் நடந்த பேர­ழி­விற்­குப் பிறகு அணு­சக்தி மீதான முத­லீ­டு­கள் குறை­யத் தொடங்­கின. ஆனால், உக்­ரேன் மீதான ர‌ஷ்­யா­வின் படை­யெ­டுப்­புக் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள எரி­சக்தி பற்­றாக்­குறை மீண்­டும் அணு­சக்தி மீதான ஆர்­வத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தற்­போது 32 நாடு­களில் பயன்­ப­டுத்­தப்­படும் அணு­சக்தி, உல­கின் மின்­சார உற்­பத்­தி­யில் 10 விழுக்­காட்டை ஈடு­கட்­டு­கிறது. 2050ல் இது இரட்­டிப்­பா­கும் என்று அனைத்­து­லக அணு­சக்தி நிறு­வ­னம் எதிர்­பார்க்­கிறது.

ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணுசக்தி உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன.

ஜப்­பா­னின் அணு­சக்தி தொழிற்­து­றைக்­குப் புத்­து­யிர் அளிக்­க­வும் புதிய அணு­மின் நிலை­யங்­களை உரு­வாக்­க­வும் பிர­த­மர் கிஷிடா சென்ற வாரம் வலி­யு­றுத்­தி­னார்.

அணுசக்தி உற்பத்தியை முடிவுக்குக் கொண்டு வரும் தனது திட்டத்தை பெல்ஜியம் ஒத்தி வைத்துள்ளது.