கனடா வங்கி கொள்ளைச் சம்பவத்தில் சிக்கிய தமிழர்

கனடா வங்கி கொள்ளைச் சம்பவத்தில் சிக்கிய தமிழர்

1 mins read
65be61e3-c764-46d6-a313-3c8465ca0714
-

கனடா: மிசிசாகாவில் வங்கியில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்பவரே கைது செய்யப்பட்ட ஆடவர் என்று இலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

இம்மாதம் 23ம் தேதி நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேக நபர் வங்கியை விட்டு வெளியேறி கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான குற்றவியல் விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் மறு நாள் அடையாளம் காணப்பட்டதாக அறியப்படுகிறது.

மாறுவேடமிட்டு கொள்ளையடித்ததாக சந்தேகநபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.